Saturday, January 24, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்ப்பாணம் - கொழும்புக்கான விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – கொழும்புக்கான விமான சேவை ஆரம்பம்

இரத்மலானையிலிருந்து ஒரு மணித்தியாலம் பத்து நிமிடத்தில் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த போக்குவரத்து சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும் என்றும், சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் காலை வேளைகளில் விமான சேவை இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 நேற்று இந்தப் பயணத்தில் இணைந்தது.

ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக சேவைகளை வழங்குகின்றன .

இங்கு பயணிக்கும் பயணிகள் 7 கிலோகிராம் பொதியை எடுத்துச் செல்ல முடியும் எனவும் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles