ஜூன் மாதத்துக்கான இலங்கையின் பணவீக்க விபரத்தினை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான பிரதான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 12.0% ஆகக் குறைந்துள்ளது.
இது கடந்த மே மாதத்தில் 25.2% ஆக கணப்பட்டது.
அதேபோல் உணவு பணவீக்கமானது ஜூன் மாதத்தில் 4.1% ஆக பதிவாகியுள்ளது.
இது கடந்த மே மாதத்தில் 21.5% ஆக பதிவானமையும் குறிப்பிடத்தக்கது.