பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஜூலை முதலாம் திகதி பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யபடவிருந்த போதிலும், தற்போதைய பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது.
மத்திய ஆண்டு உத்தியோகபூர்வ பேருந்து கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணம் 7 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும், ஆனால் ‘கொவிட்’ காலப்பகுதியில் பஸ் கட்டணத்தில் மேற்கொண்ட 10 சதவீத அதிகரிப்பால் இந்த அதிகரிப்பு ஈடுசெய்யப்பட்டது.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.30 மற்றும் மற்ற அனைத்து பேருந்து கட்டணங்களும் தொடரும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்கழு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தது.
