நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூன் முதல் வாரம் வரையான காலப்பகுதியில் 199 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில யானைகள் இயற்கையாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் ரயில்களில் மோதுண்டு விபத்துக்குள்ளாதல், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் வெடிவைத்தல் சம்பவங்கள், வாகனங்களில் மோதுண்டு விபத்துக்குள்ளாதல், நீரில் அடித்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக அந்த திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.