இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் 16.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் ற்றுமதி வருமானம் கடந்த மே மாதம் 989.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த போதிலும், கடந்த ஆண்டு (2022) மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 5.59 வீதத்தால் குறைந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.