Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதடையில்லாது விநியோகிக்கப்படும் லாஃப்ஸ் எரிவாயு

தடையில்லாது விநியோகிக்கப்படும் லாஃப்ஸ் எரிவாயு

லாஃப்ஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் சமையல் எரிவாயுவை தடையின்றி வழங்குவதாக லாஃப்ஸ் கேஸ் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி வருகிறது.

அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவுக்கு அதிகமான எரிவாயு உள்ளது என்பதை உறுதி செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விநியோகித்து வருகிறது.

லாஃப்ஸ் கேஸ் தனது சரக்குகளை மூலோபாய ரீதியாக திட்டமிட்டு, நாடு முழுவதும் சீரான மற்றும் நம்பகமான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக வலுவான விநியோகச் சங்கிலி மேலாண்மை அமைப்புகளை செயற்படுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு நுகர்வோர், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை இப்போது நாடளாவிய லாஃப்ஸ் கேஸ் விநியோகஸ்த்தர்கள் மூலம் சிரமமின்றி கொள்வனவு செய்ய முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles