இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 592,435 ரூபாவாக காணப்படுகின்றது.
நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அந்தவகையில் 650 ரூபாவால் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.