ஓமானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மாகொல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 390,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் வாக்குறுதியளித்தபடி வேலை கிடைக்கவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சந்தேகநபர் மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான செல்லுபடியான அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், ஓமானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் ஒருவரிடம் பணம் அல்லது ஆவணங்களை ஒப்படைப்பதற்கு முன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கேட்டால், இதுபோன்ற மோசடி செய்பவர்களைத் தவிர்க்கலாம் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.