மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குழுவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மத போதனைகளை அவதூறு செய்வதைத் தடுக்கவும் சட்ட விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.