அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர், வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.
அந்த ஒப்பந்தத்தின்படி, உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வழங்குவதற்கு 2.9 டொலர்கள் விரிவான கடன் வசதியை வழங்கியதன் பின்னர் கிடைத்த மிகப்பெரிய நிதியுதவி இதுவாகும்.