சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அமைச்சின் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவில்(கோபா) இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்கள் 1950 மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டவை எனவும் அதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வாகனங்கள் தொடர்பான வருவாய் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.