தாய் ஏர் ஏசியா பேங்கொக்கிற்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவையினை எதிர்வரும் ஜூலை 09 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என வாரத்திற்கு நான்கு முறை இந்த விமான சேவை முன்னெடுக்கப்படும்.
அதன்படி திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திலிருந்து இலங்கை நேரப்படி இரவு 07.45 மணிக்கு புறப்படும் FD140 விமானம் இரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.
அதேபோல் மேற்கண்ட தினங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்படும் FD141 விமானம் மறுநாள் அதிகாலை 04.05 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்தை சென்றடையும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுநோய் உச்சக்கட்டத்தின் போது கொழும்புக்கான குறித்த விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.