Friday, April 10, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதப்பிச்சென்ற கைதியை தேடி விசாரணைகள் ஆரம்பம்

தப்பிச்சென்ற கைதியை தேடி விசாரணைகள் ஆரம்பம்

காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்கு காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவரை நேற்று முன்தினம் பதில் நீதவானிடம் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமையை தொடர்ந்து சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

இதன்போதே குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்ற நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles