Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவிசாவளை பேருந்து விபத்தில் யுவதி பலி

அவிசாவளை பேருந்து விபத்தில் யுவதி பலி

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த யுவதி, பேருந்திருந்து இறங்கி முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, ​​அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அவிசாவளை, புவக்பிட்டிய, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தினக்ஷி தில்ஷிகா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

பேருந்தின் இடது பக்கம் யுவதி மீது மோதுண்ட நிலையில், அவர் தரையில் விழுந்துள்ளாா்.

இதனை அவதானிக்காது செலுத்தப்பட்ட பேருந்தின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரமும் அவா் மீது ஏறி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சாரதி பஸ்ஸை நிறுத்தாது செலுத்திய நிலையில், அதனை பின்தொடா்ந்து சென்ற பொலிஸார் தடுத்து நிறுத்தி சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்துள்ளனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles