Tuesday, June 30, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது - குமார் சங்கக்கார

இனி குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது – குமார் சங்கக்கார

இலங்கையில் மீண்டும் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘இந்தப் போராட்டம் மிகவும் உறுதியான மற்றும் தைரியமான தலைமுறையால் ஆரம்பிக்கப்பட்டது.மிகவும் தெளிவான நோக்கத்துடன் அது முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையர்கள் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனவாத அல்லது மதவாத பிளவுகளை மீண்டும் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ பிரவேசிக்க இடமளிக்க கூடாது என நம்புகிறேன். மேலும், இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக்கூடாது’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles