Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி, நடத்துநர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

சாரதி, நடத்துநர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு பொருத்தமானோரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.

520 சாரதிகளுக்கும் 170 நடத்துநர்களுக்கும் வெற்றிடம் நிலவுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் பற்றாக்குறையினால் பஸ் சேவையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வினூடாக சாரதிகள், நடத்துநர்களின் வெற்றிடங்களுக்கு உரியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles