Sunday, December 21, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு – பதுளை ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பு – பதுளை ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.

கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் ஸ்டேசன் வட்டகொட பகுதியில் தடம்புரண்டுள்ளமையே தாமதத்திற்கு காரணமாகும்.

குறித்த ரயில் இன்று காலை 8.15 அளவில் தடம்புரண்டதாக தலவாக்கலை ரயில்வே நிலையத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடம் புரண்டுள்ள ரயிலை தடமேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில் ஹட்டன் ரயில் நிலையத்திலும், பதுளையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் ரயில் நானுஓயா ரயில் நிலையத்திலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு முதல் பதுளை வரை நாளாந்தம் 08 ரயில் சேவைகள் இடம்பெறுவதாகவும் கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles