கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நோயாளிகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தாலும், தற்போது 460 வைத்தியர்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சில வைத்தியர்கள் வெளிநாடு சென்றதே இதற்கு காரணம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை திறக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.