மியன்மார் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
எனவே இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.5 ரிச்;டர் ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 48 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.