2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை செட்டிகுளம பகுதியில் ‘மொஹமட் சஹாரன்’ நடத்திய தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கணனி பாடநெறியில் கல்வி கற்கும் 23 வயதுடைய கம்பளை வெலம்படை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இந்த தீவிரவாத பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டமை தொலைபேசி தரவு பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.