Sunday, July 13, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபச்சிளம் குழந்தையை குப்பை மேட்டில் வீசிய தாய் கைது

பச்சிளம் குழந்தையை குப்பை மேட்டில் வீசிய தாய் கைது

பிறந்த குழந்தையை குப்பை மேட்டில் வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக நேற்று (20) விசாரணை ஆரம்பமானது.

சந்தேக நபரான சிசுவின் தாய், வீட்டிலேயே குழந்தையை பிரசவித்து பின்னர் குப்பையில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் தம்புத்தேகம – கிராலோகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவராவார்.

கடந்த 16ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையான காலப்பகுதிக்குள் அவர் குழந்தையைப் பிரசவித்து, அதனை குப்பை மேட்டில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாயும் சிசுவும் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles