Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ஒருவர் கைது

அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வத்தளை – ஹெந்தலவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 30 லீட்டருக்கும் அதிகமான பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யும் 68 இடங்களைக் கண்டறிய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது, 8,025 லீட்டர் பெற்றோலும் 726 லீட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles