கற்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,200 கடல் சங்குகளை கற்பிட்டி பொலிஸார் இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பல்வேறு அளவிலான 40 கடல் சங்குகள் அடங்கிய சாக்கு மூடைகள் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் விஷேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 28 வயதுடைய கல்பிட்டியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.