இலங்கையில் கறவை மாடு வளர்ப்புக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்க பிரேசில் ஒப்புக் கொண்டுள்ளது.
அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய நேற்று கைச்சாத்திடப்பட்டது.
பிரேசில் ஒத்துழைப்பு முகாமையின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்தித்து இந்த இணக்கப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
கால்நடை ஊட்டச்சத்து, கால்நடை வளர்ப்பு, பண்ணை நிர்வாகம் மற்றும் மேலாண்மை மற்றும் பால் போக்குவரத்து, சேமிப்பு மற்றும் பாலின் தரத்தை பராமரிப்பதற்காக இந்த தொழில்நுட்ப உதவி பெறப்பட்டுள்ளது.