Wednesday, November 20, 2024
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழிலாளர்களுடன் கொரியாவுக்கு புறப்பட வேண்டிய விமானம் நேற்றும் தாமதம்

தொழிலாளர்களுடன் கொரியாவுக்கு புறப்பட வேண்டிய விமானம் நேற்றும் தாமதம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 470, புறப்படுவதற்கு சுமார் 12 மணித்தியாலங்கள் தாமதமானதால், வேலைவாய்ப்புக்காக கொரியா நோக்கி பயணிக்கவிருந்த தொழிலாளர்களை அனுப்ப முடியாமல் போனதுடன்,அவர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானங்களின் இவ்வாறான தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக கொரிய வேலைகளுக்கு பணியாளர்களை அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

800ஆவது குழுவாக கொரிய வேலைகளுக்காகப் புறப்படும் நிலையில், இந்தக் குழுவை தென்கொரியாவுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தயார் செய்திருந்தது.

கொரியாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்காக 52 தொழிலாளர்கள் செல்லவிருந்த நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவையின் தாமதம் காரணமாக கொரிய மனிதவள திணைக்களம் அவர்களை நேற்று கொரியாவிற்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் இவ்வாறு தாமதமானதால், அந்த விமானத்தில் கொரியா செல்லவிருந்த இலங்கை ஊழியர்களை அந்நாட்டு மனிதவள திணைக்களம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டின் பேரில், ஜூன் 4ஆம் திகதி தொழிலாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அன்றும் இரண்டு மணித்தியாலங்கள் விமானம் தாமதமாகச் சென்றது.

இவ்வாறாக கொரிய வேலைகளுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் தாமதமாவது பாரிய நிலைமை எனவும் இதன் காரணமாக இலங்கை பணியாளர்களை கொரிய வேலைகளுக்கு அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles