Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாப்புறுதிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

காப்புறுதிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்களிடமிருந்து மாத்திரம் காப்புறுதிகளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சில நபர்கள் தள்ளுபடி அட்டைகள் போன்ற சிலவற்றை பொது மக்களிடம் கட்டணத்திற்கு விற்பது அல்லது சில காப்புறுதி தயாரிப்புகளில் தள்ளுபடிகளை வழங்குவது குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டின் இலக்கம் 43 இன் காப்புறுதி தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானவை என்று IRCSL எச்சரித்தது.

குறித்த மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு info@ircsl.gov.lk எனும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles