முட்டை பிரச்சினைக்கு நீண்டகால தீர்வாக நாடு முழுவதும் 100,000 கோழிக் குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை அரசு ஆரம்பித்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களுக்கு 2இ300 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் பயன்கள் அடுத்த 4 மாதங்களில் முழு மக்களையும் சென்றடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.