ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“இலங்கையின், பொறுப்புக்கூறல் தொடர்பான சபையின் தீர்மானங்களை அரசாங்கம் வருந்தத்தக்க வகையில் நிராகரித்த போதிலும், அது தொடர்ந்து களத்தில் எங்களுடன் இணைந்து செயற்படுகிறது.” என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
நேற்று (19) ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஜூலை 14ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதையடுத்து நாளைய தினம் (21) இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான வாய்மூல அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.