Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவயிற்றிலிருந்த 10 கிலோ எடையுடைய கட்டியை அகற்றி சாதனை படைத்த வைத்தியர்கள்

வயிற்றிலிருந்த 10 கிலோ எடையுடைய கட்டியை அகற்றி சாதனை படைத்த வைத்தியர்கள்

ஹம்பாந்தோட்டையில் உள்ள பொது வைத்தியசாலையில் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து சுமார் பத்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சத்திரசிகிச்சையில் கருப்பை வாயில் இருந்து இந்த கட்டியை அகற்றியுள்ளனர்.

சுவாச பிரச்சினை காரணமாக கடந்த வியாழக்கிழமை சிகிச்சைக்காக வருகை தந்த 49 வயதுடைய பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பெண் உடனடியாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், நேற்று (19) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சத்திரசிகிச்சையினை தொடர்ந்து நோயாளி நலமுடன் இருப்பதாக விசேட வைத்தியர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles