Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வாரம் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்?

அடுத்த வாரம் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்?

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவருக்கு அரசாங்கம் மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியது.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசவிடம் வினவிய போது, ​​பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் ஜனாதிபதி வருகை தந்த பின்னர் அவருடன் கலந்துரையாடி ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles