Thursday, December 25, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூலையில் மின்னியல் கட்டண முறை அறிமுகம்

ஜூலையில் மின்னியல் கட்டண முறை அறிமுகம்

இலங்கை மின்சார சபை (CEB) மூன்று பகுதிகளில் மின்னியல் கட்டண (e-Billing) முறையை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.

இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளியை பகிர்ந்துள்ள இலங்கை மின்சார சபை, தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பகுதிகளில் மின்னியல் கட்டண முறை ஜூலை முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாகப் பெறுவதற்கு பதிவு செய்யுமாறும் குறித்த பிரதேசவாசிகளை CEB கேட்டுக் கொண்டுள்ளது.

மின்கட்டணத்தை SMS மூலம் பெற விரும்புவோர் REG A/C எண்ணை டைப் செய்து 1987 என்ற எண்ணுக்கு SMS அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் www.ebill.ceb.lk இல் உள்நுழைந்து பதிவு செய்யலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles