இலங்கையில் நாளுக்கு நாள் இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடுகளே இதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் வெளியில் செல்லும் போது, முடிந்தவரை முகக்கவசங்களை அணிவது நல்லது என்றும் இலங்கையில் இதய நோய் மற்றும் காற்று மாசுபாடு குறித்து முறையான விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.