உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இன்று (19) மசகு எண்ணெய் விலை 1 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
OPEC உறுப்பு நாடுகள் சமீபத்தில் உலக சந்தைக்கு விநியோகத்தை மட்டுப்படுத்தியதால் மசகு எண்ணெய் விலை அதிகரித்தது.
ஆனால் சீன பொருளாதார வளர்ச்சி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 75.83 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.02 டொலராகவும் குறைந்துள்ளது.