கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நடந்ததை ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடக்க பொதுஜன பெரமுன விடாது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இது அரசியல் பிரச்சனையல்ல. மக்களின் வாழ்வாதார பிரச்சனை. எனவே தேர்தலின் போது மட்டும் அரசியல் செய்வோம்.
யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில்தான் நாடும் கிராமமும் பயன்படுத்தப்பட்டது.அந்தக் காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை கிடைத்தது.
சஜித் பிரேமதாசவைப் பற்றிப் பேசிப் பயனில்லை.அவரது 60, 70 பேர் கொண்ட குழு ரணில் விக்கிரமசிங்கவுடன் அமர்ந்திருக்கும்.அவரால் தனது சகாக்களை வைத்திருக்க முடியாது.
அனுரகுமார திஸாநாயக்கவின் கதி என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே கடந்த காலங்களில் ஜே.வி.பி.யின் கூட்டங்களில் இருந்த நண்பர்கள் இன்று எமது சந்திப்புக்கு வந்துள்ளனர் என்றார்.