கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் அதிகமாக காணப்படுவதாக அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.