இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கைகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு சுமார் 63,820 ரூபாவாகும்.
இலங்கை குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவில் 53% அதாவது 40,632 ரூபா உணவுக்காக செலவிட வேண்டியுள்ளதுடன், மீதித் தொகையான 35,492 ரூபா (மொத்த செலவில் 47%) உணவு அல்லாத தேவைகளுக்குச் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் 60% குடும்பங்களின் மாதாந்த வருமானம் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது.