செய்திகள்உள்நாட்டுமாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற பெண் கைது

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற பெண் கைது

ஹொரணையில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து நூறு மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் ஹொரண தெல்கஹ கொடல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருளை 250, 300 மற்றும் 500 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles