பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் அமர்வில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கான்ஸ்டபிள் மேல் மாகாண வடக்கு மாவட்ட போக்குவரத்து பிரிவில் கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது,
பிரான்ஸில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட அவர் கடந்த மே 23ஆம் திகதி இலங்கை திரும்பவிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் இதுவரை நாடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மேல்மாகாண வடக்கு மாவட்ட போக்குவரத்துப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறித்த கான்ஸ்டபிளை ஓய்வு பெற்ற அதிகாரி என பெயரிட்டு, அது தொடர்பான உத்தரவை நேற்று (17) பிறப்பித்துள்ளார்.