அமெரிக்க மற்றும் சீன இராஜதந்திரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் நேற்று சீனாவுக்கு விஜயம் செய்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொண்ட முதல் விஜயமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர், சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து அங்கு சீனா-தாய்வான் விவகாரம் குறித்து கலந்துரையாடினார்.
சுமார் ஐந்து மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.