கொழும்பில் காற்று மாசுபாடு மற்றும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாக கொழும்பு, தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிக்கும் போது, காற்று மாசுபாட்டிற்கு எதிரான முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான முகக்கவசங்கள் அணியுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கைத்தொழில் மயமாக்கல் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகள் ஆகியவை காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இது இலங்கையில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருதய நோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இருதயநோய் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.