செய்திகள்உள்நாட்டுபாண் விலையை 10 ரூபாவால் குறைக்குமாறு அரசு பரிந்துரை

பாண் விலையை 10 ரூபாவால் குறைக்குமாறு அரசு பரிந்துரை

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் சில நாட்களில், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும் கோதுமை மாவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தமது உற்பத்திகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles