Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்பையில் சிசுவின் சடலத்துடன் பேருந்தில் பயணித்த தந்தை

பையில் சிசுவின் சடலத்துடன் பேருந்தில் பயணித்த தந்தை

தனக்கு பிறந்து இறந்த சிசுவின் சடலத்தை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு தந்தையொருவர் பேருந்தில் பயணித்த சம்பவமொன்று இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அவரது மனைவிக்கு தின்தோரி மாவட்டத்தில் அரசாங்க வைத்தியசாலையில், கடந்த 13 ஆம் திகதியன்று ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

குழந்தை பலவீனமாக இருந்ததால், மற்றுமொரு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் திகதி குழந்தை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தையின் சடலத்தை ஊருக்கு எடுத்துச்செல்வதற்கான அமரர் ஊர்தி வழங்க முடியாதென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்தே குறித்த சிசுவின் சடலத்தை தந்தை இவ்வாறு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles