பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.