தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த உடலோடு குப்பிகள், சோளம், கோகோ இலைகள் மற்றும் விதைகள் ஆகியவையும் புதைக்கப்பட்டிருந்தன.
இந்த ‘மம்மி’ உடலானது கி.மு. 1,500-ல் இருந்து கி.மு. 1,000 வரையிலான இடைப்பட்ட காலத்தில் லிமா பள்ளத்தாக்கு பகுதிகளில் உருவான ‘மஞ்சாய்’ என்ற கலாசாரத்தை சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.