Wednesday, November 20, 2024
25.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, ​​பிரதிவாதிகளான ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

விசாரணையின் இறுதி நாளான இன்று பிரதிவாதி கோரிய ஆவணங்கள் இன்று கையளிக்கப்படும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் அதன் உதவிப் பணிப்பாளர் நாயகம் அசிதா அந்தோனி தெரிவித்துள்ளார்.

ஆவணங்களை ஆராய்ந்து மேலதிக உண்மைகளை முன்வைப்பதற்கான திகதியை வழங்குமாறு, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, வழக்கை ஜூலை 13-ம் திகதி விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles