Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுLPL ஏலத்தில் 92,000 டொலர்களுக்கு ஒப்பந்தமானார் டில்ஷான் மதுஷங்க

LPL ஏலத்தில் 92,000 டொலர்களுக்கு ஒப்பந்தமானார் டில்ஷான் மதுஷங்க

22 வயதான இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க நேற்று நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான முதல் ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணிக்காக அவர் 92,000 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அவர் 11 சர்வதேச டி:20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை மாத்திரம் எடுத்திருந்தாலும், ஏற்கனவே அவர் தனது திறனை சர்வதேச அரங்கிற்கு வெளிக்காட்டியுள்ளார்.

ஆசிய கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 24 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.

குறிப்பாக விராட் கோலியை அவர் டக் அவுட் செய்தது, அவரது திறனுக்கு சான்றாக அமைந்தது.

இதேவேளை 2023 லங்கா பிரீமியர் லீக்கில் 30 வெளிநாட்டு வீரர்கள் அங்கம் வகிப்பார்கள், 20 வீரர்கள் நேற்று நடைபெற்ற ஏலத்தில் முன் கையொப்பமிட்ட 10 வீரர்களுடன் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles