Monday, August 4, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கவிழ்ந்து 9 பாடசாலை மாணவர்கள் காயம்

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 9 பாடசாலை மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் 9 சிறுவர்கள் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதியில் உள்ள வளைவில் இன்று பிற்பகல் முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புதுறை இந்து வித்தியாலயம் மற்றும் கொழும்புதுறை துரைராசா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களை பாடசாலை முடித்து விட்டு வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles