வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 820,000 ரூபா பண மோசடி செய்த தம்பதியினர் ரம்புக்கனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய குறித்த இருவரையும் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இலங்கையின் பல பகுதிகளில் இவ்வாறான நிதி மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 46 பேர் தம்பதிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.