Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாணந்துறையில் இளைஞர் படுகொலை: சந்தேகநபர் கைது

பாணந்துறையில் இளைஞர் படுகொலை: சந்தேகநபர் கைது

கடந்த மே மாதம் பாணந்துறையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக 24 வயதுடைய இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) இரவு கதிர்காமம் பேருந்து டிப்போவில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பாணந்துறை கிரண பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக பாடசாலை மாணவர் ஒருவர் முன்னர் கைது செய்யப்பட்டார்.

தாக்குதலை நடத்துவதற்கு உதவி வழங்குவதற்காக பாடசாலை மாணவர் பிரதான சந்தேக நபருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles