இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்காக நாட்டிலிருந்து வெளியேறும் அந்நிய செலாவணியை மேலும் ஆறு மாதங்களுக்கு மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு நாட்டிலிருந்து வெளிவரும் அந்நிய செலாவணியை மட்டுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் டொலர்களின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்த போதிலும் அது போதுமானதாக இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.